நடப்புச் செய்திகள் 28 ஏப்ரல் 2018

உலக செய்திகள்

 • மியான்மர் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்பு தூதராக கிறிஸ்டீன் ஷ்ரானெர் பர்கெனெரை (ஸ்விட்சர்லாந்து) பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் நியமித்துள்ளார்.
 • ரஷ்யா, தன்னிடம் உள்ள சக்திவாயந்த எஸ்.300 ரக ஏவுகணைகளை விரைவில் வழங்க உள்ளதாக செர்கி ருட்ஸ்கோய் (ரஷ்ய ராணுவ அதிகாரி) தெரிவித்துள்ளார்.
 • இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளதை அடுத்து தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா மற்றும் சீனா இணைந்து செயல்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • தேனீக்களைக் கொல்லும் அளவுக்கு நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை வயலில் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய யூனியன் தடைவிதித்துள்ளது.

தேசிய செய்திகள்

 • மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சுதாகர் (ஜம்மு காஷ்மீர் பொறுப்பு தலைமை நீதிபதி) நியமிக்கப்பட்டுள்ளார்.
 • புதுச்சேரியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனராக வினயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்திகள்

 • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஎஸ்கே என்ற ஆப்ஸை தொடர்ந்து “பேட்டிள் ஆப் சேப்பாக் 2” என்ற ‘ஆப்’ வெளியிடப்பட்டுள்ளது.
 • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் லுங்கிசனி ங்கிடி மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.
 • ஐபிஎல் போட்டியின் தில்லி அணியைச் சேர்ந்த கிறிஸ் மோரிஸ் (காயம் காரணமாக) விலகியதை அடுத்து ஜூனியர் டாலாவை (தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
 • ஆசிய யூத் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் மூன்று தங்கப் பதக்கங்கள் மற்றும் மூன்று வெள்ளிப்பதக்கங்கள் வென்றுள்ளனர். (48 கிலோ எடைப் பிரிவில் நீது கங்காஸ் தங்கமும், 64 கிலோ பிரிவில் மனிஷா தங்கப்பதக்கமும், 69 கிலோ பிரிவில் லலிதா தங்கப்பதக்கமும், 51 கிலோ பிரிவில் அனாமிகா வெள்ளிப்பதக்கமும், 81 கிலோ பிரிவில் சாக்ஷி வெள்ளிப்பதக்கமும், ஆடவர் 60 கிலோ பிரிவில் அங்கிட் கட்னா வெள்ளிப்பதக்மும் வென்றுள்ளனர்)

வர்த்தக செய்திகள்

 • ரிசர்வ் வங்கி அடுத்த ஆண்டு ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளதாக ஃபிட்ச் மதிப்பீடு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 • 2017-18ம் ஆண்டுக்கான பிஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதம் வழங்க நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
 • இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஆதித்ய கோஷ் ராஜினாமா செய்துள்ளார்.
 • மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ.1,882.1 கோடியாக அதிகரித்துள்ளது.
 • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 17.3 சதவீதம் உயர்ந்து ரூ.9,435 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
 • ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நான்காம் காலாண்டு லாபம் ரூ.687 கோடி நிகர லாபம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *