நடப்புச் செய்திகள் 12 டிசம்பர் 2018

தமிழக நிகழ்வுகள்

 • “தி ரைஸ்” (The Rise) என்ற தலைப்பு கொண்ட தமிழ் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்களின் உச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.

இந்திய நிகழ்வுகள்

 • 15வது இந்திய சுகாதார உச்சி மாநாடானது (India Health Summit) இந்திய தொழில்துறை கூட்டமைப்பால் (CII – Confederation of Indian Industry) ஒருங்கிணைக்கப்பட்டு, புதுடெல்லியில் நடத்தப்பட்டது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு : – “இந்திய சுகாதாரம் – மாறி வரும் முன்னுதாரணம்” என்பதாகும்.
 • “இராணுவ இலக்கிய திருவிழா – 2018 (Military Literature Festival (MLF) – 2018), இந்தியாவில் சண்டிகரில்நடைபெற்றது.
  • இந்திய இராணுவம், பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசுகள் இணைந்து இத்திருவிழாவை நடத்தியுள்ளது.

உலக நிகழ்வுகள்

 • உலகில் மிக மோசமான, போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களில் ஒன்றான ஸ்லம்பர்கில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, வரும் 2019ம் ஆண்டிற்குள் பொதுப் போக்குவரத்து தொடர்பான அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்துள்ளது.
  • இதன் மூலம், பொது போக்குவரத்து கட்டணத்தை ரத்து செய்த முதலாவது நாடாக “ஸ்லம்பெர்க்”உருவெடுத்துள்ளது.

விருதுகள்

 • கிலிங்கா உலக மண் பரிசு – 2018 (Glinka world Soil Prize – 2018) அமெரிக்கா வாழ் இந்தியர் “ரத்தன் லால் (Rattan Lal) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

 • இந்திய ரிசர்வ் வங்கியின், 25வது கவர்னராக, முன்னாள் பொருளாதார விவகார செயலாளர் “சக்தி காந்த தாஸ்”நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதற்கு முன் கவர்னராக இருந்த “உர்ஜித் பட்டேல்” ராஜினாமா செய்துள்ளதை அடுத்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார நிகழ்வுகள்

 • பெர்சிய வளைகுடா நாடான ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை ரூபாயில் செலுத்துவதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே கையெழுத்தாகி உள்ளது.
  • இதற்கு முன்னர் இந்தியாவானது, கச்சா எண்ணெய் வழங்கும் நாட்டிற்கு இந்திய, ஐரோப்பிய வங்கி மூலம்“யூரோ”க்களில் பணம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினங்கள்

 • சர்வதேச மலைகள் தினம் – டிசம்பர் 11 (International Mountain Day)
  • மலைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பங்களிப்பில் மலைகளின் இன்றியமையாத தன்மைகளை ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11 அன்று சர்வதேச மலைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2018 – சர்வதேச மலைகள் தின மையக்கருத்து : – “Mountains Matter” என்பதாகும்.

புத்தகங்கள்

 • 2001 – 2010 வரையிலான இந்தியன் கடற்படையின் வரலாற்றைக் கூறும் “நீலக்கடல் புரட்சி” (Blue waters Ahoy)எனும் நூலை கடற்படைத் தலைமை அதிகாரியான அட்மிரல் சுனில் லம்பா புது டெல்லியில் வெளியிட்டுள்ளார்.
  • இப்புத்தகமானது, துணை அட்மிரலான “அனூப் சிங்” – ஆல் எழுதப்பட்டது.

TNPSC, TNUSRB மற்றும் RRB தேர்வுகளுக்கான அனைத்து வகையான online preparation மற்றும் study materials வெப்சைட்www.learner.guruஇல் உள்ளது மேலும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வினாக்கள், மாதிரி தேர்வுகள்,நடப்பு நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகள் பற்றி அறிய www.learner.guruகாணவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *