நடப்புச் செய்திகள் 11 டிசம்பர் 2018

தமிழக நிகழ்வுகள்

 • திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில் முதலாம் பராந்தகச் சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • அக்கல்வெட்டு, நெற்குன்ற ஏரிக்கு சோழ சிற்றரசர் வரிச் சலுகை அளித்த செய்தியைக் கூறுகிறது.

இந்திய நிகழ்வுகள்

 • யூனியன் பிரதேசங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையும் அருங்காட்சியகம் புதுச்சேரி கடற்கரையிலிருந்து அமைய உள்ளது.
  • இவ்வருங்காட்சியகம் அமைப்பதற்காக INS– கடலூர் (INS-Cuddalore) மூலம் சுமார் 30,000 கடல் மைல்தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
 • நீர் முகாமைத்துவத்திற்கான நிலையான கொள்கைகளை மேம்படுத்துவதற்காக, சர்வதேச அளவிலான முதல் “நிலையான நீர் மேலாண்மை” மாநாடு பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலியில் நடைபெற்றது.
  • இம்மாநாட்டில் இமாச்சல் பிரதேசத்தின் ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத் என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 • இந்திய விமானப்படை (IAF – Indian Air Force) மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு விமானப்படை ஆகியவற்றிற்கிடையேயான“AVIAINDRA – 2018” என்ற கூட்டு விமானப்படை பயிற்சி இராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் நடைபெற்று வருகிறது.
 • கேரள மாநிலத்தின் கண்ணணூரில் புதியதாக அமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதன் மூலம் 4 விமான நிலையங்கள் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.

உலக நிகழ்வுகள்

 • வங்கிக்கடன் திவால் நெறிமுறைகள் தொடர்பான மாநாடு (Insolvency and Bankruptcy code of India – New paradigm for stressed Assets) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
  • இம்மாநாட்டில் இந்தியா சார்பாக இந்திய வங்கி திவால் வாரியத்தின் தலைவர் எம்.எஸ். சாஹீ கலந்து கொண்டார்.
 • சீனாவின் “பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பில்” (Belt and Road Initiative – BRI) இணைந்துள்ள முதல் மத்திய அமெரிக்க நாடு எனும் பெயரை “பனாமா” நாடு பெற்றுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 • நிலவில் பயிரிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான, சீனாவின் “சாங் இ -4” (chang’e -4) என்னும் திட்டத்தின் மூலம் சீனாவானது ரோவர் என்னும் விண்கலத்தை “லாக் மார்க் – 3B” என்னும் இராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கியுள்ளது.
  • இந்த ரோவர் விண்கலத்திற்கு “லூனார் மினி பயோஸ்பியர்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பொருளாதார நிகழ்வுகள்

 • சீனாவின் பய்ஜிங்-ஐ தலைமையகமாகக் கொண்ட ஆசியன் உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது, ஆந்திர பிரதேசத்தின் நீர் மேலாண்மை மற்றும் நீர் சுத்திகரிப்பிற்காக சுமார் 400 மில்லியன் டாலர் கடனுதவியை வழங்க உள்ளது.
  • இவ்வங்கியில் அதிக பங்குகளை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

முக்கிய தினங்கள்

 • சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் – டிசம்பர் 09.
  ஊழலை தடுக்கவும், ஊழல் ஒரு கடுமையான குற்றம் என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக,ஆண்டு தோறும் டிசம்பர் 09 ஆம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது 2003 முதல் கடைபிடிக்கப்படுகிறது.

TNPSC, TNUSRB மற்றும் RRB தேர்வுகளுக்கான அனைத்து வகையான online preparation மற்றும் study materials வெப்சைட்www.learner.guruஇல் உள்ளது மேலும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வினாக்கள், மாதிரி தேர்வுகள்,நடப்பு நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகள் பற்றி அறிய www.learner.guruகாணவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *