நடப்புச் செய்திகள் 10 டிசம்பர் 2018

இந்திய நிகழ்வுகள்

 • முதல் இந்தியா – ஆசியான் இன்னோடெக் உச்சி மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இது அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை (DST) மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FCCI) சார்பில் நடத்தப்பட்டது.
 • இந்திய கடற்படையானது தனது முதன்மை கடலோரப் பகுதி பாதுகாப்பு பயிற்சியான ட்ரோபெக்ஸ்-2019 (TROPEX – Theatre Level Operational Readiness Exercise) எனும் பயிற்சியை 2019 ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை நடத்த உள்ளது.
  • கடலோர பாதுகாப்பு உபகரணங்களின் முழு வலிமையினை சோதிப்பதே இதன் நோக்கமாகும். TROPEX-ன் ஒரு பகுதியாக “Exercise Sea Vigil” என்னும் பயிற்சியும் நடைபெற உள்ளது.
 •  உணவு விநியோகத்தில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட மாறுபக்க கொழுப்பை (trans-Fat) ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையமானது (FSSAI – Food Safety and Standards Authority of India) “Heart Attack Rewind” என்ற ஊடகப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

உலக நிகழ்வுகள்

 • காலநிலை மாற்றத்திற்கான ஐ.நா. கூட்டமைப்பு ஒப்பந்தத்தின் உறுப்பினர் நாடுகளின் 24-வது மாநாடு (COP-24), போலாந்து நாட்டின் கட்டோவைஸ் நகரில் நடைபெற்றது.
  • இம்மாநாட்டில், 2018-ஆண்டின் பாரிஸ் உடன்படிக்கையை (Paris Agreement) நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை இறுதி செய்ய உள்ளது.
  • 2018-ன் இந்திய இருக்கையின் கருத்துரு: “ஒரு உலகம் ஒரு சூரியன் ஒரு கட்டமைப்பு” (One world One Sun One Grid) என்பதாகும்.

விளையாட்டு நிகழ்வுகள்

 • கால்பந்து விளையாட்டின் பெருமைமிக்க விருதான “பால் ஆன் டி ஆர்” (Ballon D’or) – 2018 விருதினை குரோஷியாவின்“லூகா மாட்ரிக் பெற்றுள்ளார்.
  • பெண்களுக்கான பால்ஆன் டி ஆர் விருதினை நார்வேயின் “அடா ஹெகர் பெர்க்” என்பவர் பெற்றுள்ளார். பெண்களுக்கு இவ்விருது வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

நியமனங்கள்

 • முன்னாள் மூத்த இந்திய அரசுத் தூதரான “பிரீத்தி சரண்” ஐ.நா.வின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான சமூக பொருளாதார கலாச்சார உரிமைக் குழுவிற்கு (CESCR – Committee On Economic, Social and Cultural Rights)தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • CESCR ஆனது 1985 ஆம் ஆண்டில் ECOSCO ஆல் ஏற்படுத்தப்பட்டது. இவ்வமைப்பு, சமூக-பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை கண்காணிக்கும்.

விருதுகள்

 • 2018 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க இளையோர் உயிர்தொழில்நுட்பவியலாளர் விருது ஐஐடி-மாண்டியின் துணைப் பேராசிரியரான “டாக்டர். ராஜானிஸ் கிரி” என்பவருக்கு வழங்கப்படுகிறது. (IYBA – Innovative Young Bio-technologist Award)
  • ஜிகா வைரஸ் புரத உறை மடிப்பு மற்றும் நோய் தடுப்பிற்கான கண்டுபிடிப்பு மீதான புத்தாக்க கருத்தை பரிந்துரைத்தற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
 • சீனாவின் சான்யா நகரில் நடைபெற்ற 68-வது உலக அழகி போட்டியில் மெக்சிகோவின் “வனிசா போன்ஸ் டி லியோன்” 2018 – ஆம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றுள்ளார்.
  • 2017 ஆம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு – இந்தியாவின் “மனுஷி சில்லார்” என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினங்கள்

 • உலக மனித உரிமைகள் தினம் – டிசம்பர் 10
  • 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்று கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டின் உலக மனித உரிமைகள் தின கருத்துரு (Theme): “மனித உரிமைகளுக்காக எழுந்து நில்” (Stand up For Human Rights)

TNPSC, TNUSRB மற்றும் RRB தேர்வுகளுக்கான அனைத்து வகையான online preparation மற்றும் study materials வெப்சைட்www.learner.guruஇல் உள்ளது மேலும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வினாக்கள், மாதிரி தேர்வுகள்,நடப்பு நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகள் பற்றி அறிய www.learner.guruகாணவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *