நடப்புச் செய்திகள் 09 டிசம்பர் 2018

தமிழக நிகழ்வுகள்

 • முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் நவீன தொழில்நுட்ப முறை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த அதிநவீன வருகை பதிவு திட்டம் SMART ATTENDANCE SCHEME என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்திய நிகழ்வுகள்

 • இந்தியாவின் நீளமான ரயில் – சாலை பாலமான “போகிபீல்” பாலத்தை (India’s longest rail-cum-road bridge – Bogibeel), பிரதமர் டிசம்பர் 25 அன்று திறந்து வைக்க உள்ளார்.
  • இப்பாலமானது, பிரம்மபுத்திரா நதியில் கட்டப்பட்டுள்ளது.
  • அசாமின் திப்ரூகர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பசிகாட் பகுதியையும் இப்பாலம் இணைக்கிறது.
 • சர்வதேச ஒலிம்பிக் குழுவானது, (International Olympic Committee – IOC), “ஜியித் ராத் அல்-ஹீசைன்” தலைமையில் மனித உரிமைகளுக்கான ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • ஜியித் ராத் அல் – ஹீசைன் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஐ.நா. உயர் ஆணையர் ஆவர்.
 • நீர்வள ஆதாரங்கள், நிதி மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி, புது டெல்லியில், இந்தியா நீர்வாழ் உச்சி மாநாடு 2018-ஐ தொடங்கி வைத்துள்ளார்.

உலக நிகழ்வுகள்

 • பொருளாதார நுண்ணறிவு பிரிவு மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான பரில்லா மையத்தால் வெளியிடப்பட்ட, 2018க்கான உணவுக்கான குறியீட்டில் (Food Sustainability Index), இந்தியாவானது 67 நாடுகளில் 33வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • பிரான்ஸ் நாடானது முதலிடத்தில் உள்ளது.
  • இக்குறியீடு, மிலனில் நடைபெற்ற BCFN உணவு மன்றத்தில் வெளியிடப்பட்டது.
 • கேம்பிரிட்ஜ் அகராதி “நோமோபோபியா” என்ற சொல்லை 2018ம் ஆண்டின்” மக்களின் சொல் (people’s word) என அறிவித்துள்ளது.
  • அலைபேசி இல்லாமலோ, அதைப் பயன்படுத்த முடியாமலோ இருக்கும் போது ஏற்படும் படபடப்பு, கவலை ஆகியவற்றை குறிக்கும் சொல் Nomophobia – No mobile phobia.

விளையாட்டு நிகழ்வுகள்

 • குறைந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் “யாசிர் ஷா” படைத்துள்ளார்.

பொருளாதார நிகழ்வுகள்

 • மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கிகளிடம் இருந்து வணிக வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.5 சதவீதமாகவும், வணிக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 6.25 சதவீதமாகவும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வங்கி விகிதம் – 6.75 சதவீதம்

நியமனங்கள்

 • சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபராக “உய்லி மவுரர்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டில் ஆண்டுதோறும், அந்நாட்டின் பாராளுமன்றம் தான் அதிபரை தேர்ந்தெடுக்கும்.

TNPSC, TNUSRB மற்றும் RRB தேர்வுகளுக்கான அனைத்து வகையான online preparation மற்றும் study materials வெப்சைட்www.learner.guruஇல் உள்ளது மேலும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வினாக்கள், மாதிரி தேர்வுகள்,நடப்பு நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகள் பற்றி அறிய www.learner.guruகாணவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *