நடப்புச் செய்திகள் 08 டிசம்பர் 2018

தமிழக நிகழ்வுகள்

 • ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள உலக பொருளாதார ஆய்வறிக்கையின் படி 2019-2023 ஆம் ஆண்டுகளில் வேகமாக வளரும் இந்திய நகரங்களின் டாப் 10 பட்டியலில் சூரத் முதலிடத்திலும், ஆக்ரா இரண்டாவதுஇடத்திலும் உள்ளது.
  • தமிழகத்தில் திருப்பூர் (6வது இடம்), திருச்சி (9வது இடம்) சென்னை (10வது இடம்) ஆகிய மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

 இந்திய நிகழ்வுகள்

 • ஒடிசா அரசின் பல்வேறு திட்டங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த “பீத்தா” (PEETHA – Peoples Empowerment Enabling Transparency and Accountability) என்னும் புதிய முன்முயற்சி திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
 • கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களுரு மாநகராட்சி பள்ளிகளில் டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் முறையான “ரோஷினி” என்னும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இத்திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம், துர்தர்ஷன் டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் செயல்படுத்துகிறது.
 • உள்நாட்டு பாதுகாப்புப் தொழில்துறையின் அறிவுசார் சொத்துரிமைக் கலாச்சாரத்தை (IPR – Intellectual Property Right) மேம்படுத்துவதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் “ரக்ஷா கயான் சக்தி” என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
 • புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான நிதி ஆதாரங்களில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக தொழில் நிறுவனம் – கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்த முதல் மாநாடு மும்பையில்நடைபெற உள்ளது.
  • இம்மாநாட்டை சென்னை – ஐஐடி நிறுவனம் நடத்த உள்ளது.

உலக நிகழ்வுகள்

 • தென் ஆப்பிரிக்கா நாட்டின் “தேசிய குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக” இந்திய வம்சாவளியைச் சேர்ந்த “ஷமிலா படோஹி” நியமிக்கப்பட்டுள்ளார்.
 •  உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பான குளோபல் கார்பன் புராஜெக்ட் ஆய்வில் இந்தியாவானது 7 சதவீதம் கார்பன் வெளியேற்றத்துடன் நான்காவது இடம் பிடித்துள்ளது.
  • இதில், சீனா (27 சதவீதம்) முதலிடத்திலும், அமெரிக்கா (15 சதவீதம்) இரண்டாம் இடத்திலும் உள்ளது.

நியமனங்கள்

 • மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பேராசிரியர் “கிருஷ்ண மூர்த்தி சுப்பிரமணியன்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதற்கு முன் இப்பதவியில் அரவிந்த் சுப்பிரமணியன் என்பவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தினங்கள்

 • இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 ஆம் நாள் தேசிய படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
  • இக்கொடி நாள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

TNPSC, TNUSRB மற்றும் RRB தேர்வுகளுக்கான அனைத்து வகையான online preparation மற்றும் study materials வெப்சைட்www.learner.guruஇல் உள்ளது மேலும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வினாக்கள், மாதிரி தேர்வுகள்,நடப்பு நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகள் பற்றி அறிய  www.learner.guruகாணவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *